முக்கியச் செய்திகள் குற்றம்

அட்சய திருதியை நாளில், 52 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தூத்துக்குடி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இதனால், நேற்று தங்கநகை கடைகள் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடை உரிமையாளர்கள் பல்வேறு வகையில் வரவேற்றனர். நாள் முடிவில், 18 டன் தங்கம் ரூ.9,000 கோடிக்கு விற்பனை செய்யப்படுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி; ‘விஸ்வரூபம் எடுக்கும் அணு உலை வழக்கு; ‘கூடங்குளத்தை பாதுகாக்க 50 மாதம் தேவை’ – இந்திய அணுசக்தி கழகம்’

இந்நிலையில், தூத்துக்குடி அருகே பேருரணியில் வசித்து வரும் சுடலைமுத்து நேற்று இரவு வீட்டை உட்பக்கம் பூட்டி விட்டு அவரும் அவரது மனைவி பேச்சியம்மாளும் வீட்டின் மேல்தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் கீழே உள்ள மற்றொரு அறையில் மகன்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை விழித்த சுடலை முத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது உள் அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த 52 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளை நடந்த வீட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிபரின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி பலி!

Jeba Arul Robinson

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

G SaravanaKumar

டெல்லியில் அதிகரித்த காற்று மாசு

Halley Karthik