உலக கோப்பை ஹாக்கி; ஜப்பானை வீழ்த்தி கொரியா வெற்றி

இன்று நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கொரியா அணி வெற்றி பெற்றது. ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில்…

இன்று நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கொரியா அணி வெற்றி பெற்றது.

ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் ஒட்டுமொத்தமாக 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள 4 அணிகளும், மூன்று அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

குரூப் A பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ் அணிகளும், குரூப் b பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா அணிகளும், குரூப் C பிரிவில் சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் D பிரிவில் இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொரியா – ஜப்பான் அணிகள் மோதின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கொரியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்து முடிந்த லீக் போட்டிகள் இரண்டிலும் தோல்வியை சந்தித்து, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாமல் குரூப் A தென் ஆப்ரிக்கா அணியும், குரூப் B ஜப்பான், குரூப் C சிலி, குரூப் D வேல்ஸ் ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.