தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ’தாம்பூல தட்டில் வைத்து மனு கொடுக்கும் நூதனப் போராட்டம்’!

தூத்துக்குடி மாவட்டம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர்…

தூத்துக்குடி மாவட்டம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க கோரியும், ஆவண பதிவு மேற்கொள்வது தொடர்பாகவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி வட்டாட்சியர் அவர்களால் போடப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடந்த இந்த போராட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜகோபால் சார்பில் நடைபெற்றது.

த.மா.கா கட்சியினர் தாம்பூல தட்டில் வைத்து மனுவை எடுத்து வந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அவர்கள் மனுவை அளித்தனர். மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து த.மா.கா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.