முக்கியச் செய்திகள் உலகம்

பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சர்வதேச பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தடுப்பூசி காரணமாக உலக நாடுகள் மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் புதிய கொரோனா திரிபு வைரஸ் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தொற்றை தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஓமிக்ரான் வைரஸ் பரவலால் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று OECD எனப்படும் சர்வதேச பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் வைரசை முழுமையாக ஒழிக்கும் வரை உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை இருக்கும் எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

உலக நாடுகள் கொரோனா தாக்கத்தின் பொருளாதார பாதிப்பிலிருந்து மெள்ள மீண்டு வரக்கூடிய நிலையில் OECD-ன் தற்போதைய அறிக்கை பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உயிரை மாய்த்து கொள்ளும் துயரம்; இரண்டாம் இடத்தில் தமிழகம்

Sugitha KS

தரமற்ற சானிட்டரி நாப்கின்களால் பேராபத்து : திரும்பப் பெறுமா நிறுவனங்கள்?

Sugitha KS

உள்ளாட்சித் தேர்தலிலும் கடும் நடத்தை விதிகள்: உச்சநீதிமன்றம்

EZHILARASAN D