‘மிர்சாபூர்’ தொடரின் நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2018ல் வெளியான ‘மிர்சாபூர்‘ தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 2020ல் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. மொத்தமாக 19 அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் நாடு முழுவதும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த தொடரின் மூன்றாவது பாகம் வெளிவரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த தொடரில் நடித்த நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரில் ‘லலித்’ என்கிற கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த ‘பிரம்மா மிஸ்ரா’ அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இதயம் சம்பந்தமான பிரச்னை இருந்ததாகவும் அதன் காரணமாக தொடர் மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பிரம்மா மிஸ்ராவின் உடலை சிதைந்த நிலையில் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் காவல்துறை தரப்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
ஒரு வெற்றி தொடரில் பிரபலமடைந்து திடீரென நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக நடிகர்கள் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.









