இதுவரை பரவிய கொரோனா அலைகளை காட்டிலும், ஒமிக்ரான் வகை தொற்று வேகமாக பரவக்கூடியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில், தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ள, 7 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,
இதுவரை பரவிய கொரோனா அலைகளை காட்டிலும், ஒமிக்ரான் வகை தொற்று வேகமாக பரவக்கூடியது எனவும், முககவசம், தடுப்பூசி ஆகிய இரண்டுமே சிறந்த தீர்வு எனவும் அவர் தெரிவித்தார்.
நைஜீரியாவில் இருந்து வந்த நபர், மற்றும் அவரது குடும்பத்தினரின் பரிசோதனை மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் சோதனை முடிவுகள் தெரிந்துவிடும் எனவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமானநிலையங்களில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், 12,039 பேர் ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளதாகவும், அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement: