தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் தொடர் போட்டிகளில் தான் பங்கேற்பேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் டிச.26ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டியில் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் கோலி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விராட் கோலி ஒருநாள் தொடரிலிருந்து விலகுவார் என தொடர் செய்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.
இதனிடையே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரிலிருந்து விலக்க அளிக்க கோரியதாகவும், அதனால், அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கோலி, தான் ரோகித் சர்மா கேப்டன்சியில் ஒருநாள் தொடரில் தொடருவேன் என பேட்டியளித்துள்ளார். முன்னதாக 90 நிமிடங்கள் வரை டெஸ்ட் போட்டி குறித்து தலைமை தேர்வாளரிடம் கலந்தாலோசித்தேன் எனவும் இனி நான் ஒருநாள் தொடரில் கேப்டனாக தொடரமாட்டேன் என கூறியதாக விராட் கோலி தெரிவித்தார். இதன் மூலம், அவர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.







