முக்கியச் செய்திகள் தமிழகம்

தூய்மை இந்தியா குறித்த கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.3,297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

நகர்புறங்களில் அமல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செலவிடும் வகையில் ரூ.3,296.7 கோடியை தமிழ்நாட்டிற்கென ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் செலவிடப்பட உள்ள தொகையில் மத்திய அரசின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறதா? இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திமுக எம்.பி கனிமொழி சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் கௌஷல் கிஷோர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: “தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் பகுதியை மத்திய அரசு இந்தாண்டு அக்டோபர் முதல் தேதியன்று தொடங்கியது. 2014ல் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய போது ஒதுக்கப்பட்ட நிதியைப்போல் இரண்டரை மடங்கு அளவு அதாவது ரூ1.41 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த இரண்டாம் கட்ட திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய அரசின் நிதி பங்களிப்பு சுமார் ரூ.36 ஆயிரம் கோடி.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.3,296.7 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2014-15 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,144 கோடி. இந்த நிதியைக் கொண்டு சுமார் 5 லட்சம் வீடுகளில் தனி கழிப்பறை வசதியும்; 93 ஆயிரம் பொதுக் கழிப்பிட வசதியும் செய்து தரப்பட்டிருக்கிறது.

அத்துடன், வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டமும் 98 சதவிகிதம் நிறைவேற்றப்படிருக்கிறது. குப்பைகளை வகை வாரியாக பிரிக்கும் பணி 92 சதவிகிதமும்; அதை விஞ்ஞானப் பூர்வமாக சுத்திகரிக்கும் பணி 53 சதவிகிதமும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது.

இதுதவிர, தூய்மையின் அவசியத்தை மக்களுக்கு தெரிவித்தல், கற்பித்தல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் அதை கொண்டு செல்லுதலுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடேங்கப்பா.. இன்ஸ்டாவில் இவருக்கு இவ்ளோ பாலோயர்களா?

EZHILARASAN D

ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்துகிறது – வெள்ளையன்

Web Editor

யார் இந்த ஷெபாஸ் ஷெரீப்…?

EZHILARASAN D