ஒமிக்ரான் பரவல்; கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்

ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தி உள்ளார். சென்னை ஆவடியில் நடைபெற்று வரும் ராணுவ தளவாடங்கள் மற்றும் இயந்திரங்கள்…

ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை ஆவடியில் நடைபெற்று வரும் ராணுவ தளவாடங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளடக்கிய கண்காட்சியில் வைக்கப்படுள்ள குண்டு துளைக்காத தலைக்கவசம், குண்டு துளைக்காத பாதுகாப்பு ஜாக்கெட், பாராசூட், நவீன டெண்ட் ஆகியவற்றை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கனரக வாகன தொழிற்சாலையின் கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பீரங்கி, டாங்கி உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். அதேபோல, உதிரி பாகங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்பு அங்கு கூடியிருந்த குழந்தைகளுடன் செல்பி மற்றும் புகைப்படங்களும் அவர் எடுத்துக் கொண்டார்.

பின்னர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் டாங்கி, ராணுவ வீரர்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அங்கே CVRDE யின் விஞ்ஞானிகள் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயந்திரத்தின் தன்மை, அதன் பயன்பாடு ஆகியவற்றை விளக்கினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், இந்த கண்காட்சி குழந்தைகளுக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ஒமிக்ரான் தொற்று பரவிவரும் சூழலில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.