முக்கியச் செய்திகள் தமிழகம்

கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பொருந்தாலூரை அடுத்த தெலுங்கப்பட்டியை சார்ந்தவர் மாரியாயி (வயது 65). இவர் அந்த கிராமத்தில் சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் முத்துச்சாமி இயற்கை எய்துவிட்ட நிலையில் 2 மாற்றுத்திறனாளி பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சார்ந்த தென்னூரான், முத்துலட்சுமி, கணேசன், சாந்தி ஆகியோர் மாரியாயின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

அதை தடுக்க முயலும்போது, அவர்கள் மாரியாயியை தகாத வார்த்தைகளால் திட்டிகொண்டே அடிக்க வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய மூதாட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பில் இருந்த பெண் போலீசார் மண்ணெண்ணெய் கேனை எடுக்கும் போதே தடுத்து காப்பாற்றினார். இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

Gayathri Venkatesan

தொழில்நுட்ப கோளாறு சரியானதால் ஸ்டெர்லைட்டில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி: அமைச்சர் தகவல்!

Halley karthi

சி.வி.சண்முகத்தை அதிமுக-விலிருந்து நீக்குவார்களா? புகழேந்தி கேள்வி

Vandhana