மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவு

மயானங்களை முறையாக சுத்தப்படுத்தி அடிப்படை வசதிகளுடன், தண்ணீர் வசதி, மின்சாரம், உள்ளிடவைகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு…

மயானங்களை முறையாக சுத்தப்படுத்தி அடிப்படை வசதிகளுடன், தண்ணீர் வசதி, மின்சாரம், உள்ளிடவைகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில், 6 தனியார் மயானங்கள் உள்ளன. அவற்றில் 4 நகராட்சி பதிவேட்டில் குறிப்பிடப்படாமலேயே இயங்கி வருகின்றன. ஆனால் நகராட்சி, ஊராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான மயானங்கள் உரிய பராமரிப்பு, அடிப்படை வசதிகளும் செய்வதில்லை.

குறிப்பாக எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் உடல்களின் பதிவேடுகள் கூட முறையாக பின்பற்றுவதில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் இது தேவையற்ற விளைவுகளை உருவாக்கும். ஆகவே, மயானங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதமாகவும், அடிப்படை வசதிகளுடன் தூய்மையாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியி ருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, மயானங்களை முறையாக சுத்தப்படுத்த வேண்டும், அங்கு அடிப்படை வசதிகளுடன் தண்ணீர் வசதி, மின் சாரம், உள்ளிடவற்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். மேலும் மயானங்கள் பரமரிப்பு குறித்து நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.