நா.முத்துக்குமார் எனும் கவிதை நதி

காஞ்சிபுரத்தில் புறப்பட்டு சென்னையில் சங்கமித்த கவிதை நதி நா.முத்துக்குமார். இயக்குநர் அருண்மொழி, பாலுமகேந்திரா என, பலருடனும் பயணிக்கும் வாய்ப்பு வாய்ததால், திரைக்கதை எழுதுவதுடன் காட்சிக்கு ஏற்றவாறு திரைப்பாடல் எழுவதையும் கற்றுத்தெளிந்தது இந்த கவிதை நதி……

காஞ்சிபுரத்தில் புறப்பட்டு சென்னையில் சங்கமித்த கவிதை நதி நா.முத்துக்குமார். இயக்குநர் அருண்மொழி, பாலுமகேந்திரா என, பலருடனும் பயணிக்கும் வாய்ப்பு வாய்ததால், திரைக்கதை எழுதுவதுடன் காட்சிக்கு ஏற்றவாறு திரைப்பாடல் எழுவதையும் கற்றுத்தெளிந்தது இந்த கவிதை நதி…

ஆகையால் தான், பாடல் எழுதப் போகிறேன் என்று சொன்ன போது, தனக்கு கோவம் வந்தாலும், பிடித்ததை செய் என அன்பால் அனுப்பி வைத்தார் பாலு மகேந்திரா… அப்படி தொடங்கிய பயணம், சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக அரியணையில் அமரவைத்தது நா.முத்துக்குமாரை……..

அவர் எழுதிய “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலும், கண்பேசும் வார்த்தை தெரிவதில்லை என்ற பாடலும் இளசுகளின் காதல் ரீங்காரம்…..

((அவள் அப்படி ஒன்றும் அழகில்லை))

விடலை பருவத்தினருக்கு தேவதையை கண்டேனும், நகரத்து இளைஞர்களுக்கு என் காதல் சொல்ல நேரம் இல்லை பாடலும், காதலை கற்றுத்தந்த காவியங்கள்

((என் காதல் சொல்ல நேரம் இல்லை))

தாயின் பேரன்பை பதிவு செய்த தமிழ் சினிமாவில், தந்தையின் அன்புக்கு இலக்கணம் எழுதியவர் நா.முத்துக்குமார்…

(( தெய்வங்கள் எல்லாம் தொற்றே போகும்))

கற்றது தமிழ், தரமணி, பையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என யுவன் ஷங்கர் ராஜாவும் நா. முத்துகுமாரும் இணைந்த கூட்டணி நிகழ்த்திய மேஜிக் ஏராளம். காதல், வெறுமை, அன்பு, பிரிவு, இழப்பு என இப்படி எல்லா மனநிலைக்கும் அவரால் பாடல் எழுத முடியும். நம்மை புன்னகை செய்யவும், அழவைக்கவும் அவரால் முடியும், நம் நினைவுகளை நமக்கு தெரியாமலேயே நமக்குள் கடத்துபவர் நா.முத்துக்குமார்.

உங்களுக்கு விருப்பமான பாடல்களில் பாதி அவர் எழுதியதாகத்தான் இருக்கும். ஒரு மரத்தின் அசைவை, நதியின் ஓட்டத்தை, பறவையின் வாழ்வை, வரிகளில் வாழவைத்த முத்துக்குமாருக்கு, முன்னணி கதாநாயகர்களுக்கு ஒப்பான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திரைப்பாடல்களுக்காக 2 முறை தேசிய விருது, 4 முறை தமிழ்நாடு அரசின் விருது என கவிஞர்களில் தனி ஆவர்த்தனம் செய்தவர் முத்துக்குமார்…

அதை நிரூபித்தது அவரது மரணம். அவருக்காக கண்ணீர் சிந்தியவர்களின் பட்டியல் பெரியது…

வெயிலோடு விளையாடிய நீ…
காதல் சொல்ல நேரம் இல்லை என்று சொன்ன நீ…
இந்த தனியான பயணம் இன்றோடு முடியதா என்று ஏங்க வைத்த நீ
போகாதே போகாதே.. என்று கெஞ்சவைத்த நீ
இப்போது எங்களோடு இல்லை… ஒவ்வொரு நொடியிலும், உன் இருப்பை உணர்த்திக் கொண்டிருக்கிறது உன் பாடல்கள்………

வாசுகி, நியூஸ் 7 தமிழ்,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.