முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு தள்ளுபடி

திரையரங்கங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு, கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அதன்படி மாநகராட்சி பகுதியில் உள்ள திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல, நகராட்சி பகுதி திரையரங்களாக இருந்தால் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள திரையரங்க பார்க்கிங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்து, திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை அதிகரிக்கக் கோரி இளவரசு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்த போது, தங்கள் தரப்பு கருத்தை கேட்காமலும், நிலத்தின் மதிப்பை கணக்கில் கொள்ளாமலும் அரசு, கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தான், அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். மேலும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றால் அது பொது நலனுக்கு எதிரானது ஆகிவிடும் என்பதாலும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு வழக்கை, தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

மேலும், கட்டணத்தை அதிகரிக்க கோரி மனுதாரர் அரசை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவு படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலவச நாப்கின்கள் – ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!

Nandhakumar

நாடு முழுவதும் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை!

யானை தாக்கி உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

Web Editor