பரமக்குடி அருகே சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி அடுத்த பெருங்கரை கிராமத்தில் வீற்றிருக்கும் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அட்டாள சொக்கநாதர் சிவாலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை கும்பாபிஷேக விழா இக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜை உடன் தொடங்கியது. இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு காலை 5:30 மணியளவில் சிவாச்சாரியார்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன. இதற்கிடையே சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் ஸ்ரீ அட்டாள சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந் நிகழ்வில் ஏராமான சிவ பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
—கோ சிவசங்கரன்







