தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது.

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்க டாலர் மதிப்பு, பத்திரங்களின் வட்டி விகிதம், சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணிகள் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதனிடையே வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.13,675 க்கும் சவரன் ரூ.1,09,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,660-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.