மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம மற்றும் தாராபுரம் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 9 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவிய சலசலப்பு காரணமாக மதுராந்தகம், தாராபுரம், விராலிமலை, கரூர் உள்ளிட்ட 6 தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை தவிர மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தலை ஒட்டி மதுராந்தகத்தில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரத்தில் 302 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதும் திமுக, தவெக, அதிமுக, இடதுசாரி, நாம் தமிழர் வேட்பாளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

இந்த நிலையில் காலை 9 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.99% சதவிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 17.55% சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதேபோல் புதுச்சேரி மாநில தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 19.20% வாக்குகள் பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.