நாட்றம்பள்ளி பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெறும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் எருது
விடும் திருவிழா நாளை நடை பெற உள்ளது. போட்டி நடக்க இருக்கும் இடத்தை வட்டாட்சியர் குமார், வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி, ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு போது காளை ஓடும் பாதை, காளை சென்றடையும் இடம், காளைகளுக்கும் பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் காளைகள் பத்திரமாக பாதுகாக்கும் வகையில் இடத்தையும் ஆய்வு மேற்கொண்டனர்.
விழாவில், எருது விடும் குழு ஆய்வு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் எருது விடும் திருவிழா நடைபெறும் இடத்திற்கு தீயணைப்பு துறை மருத்துவ துறை காவல்துறை வருவாய் துறை என அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விழா குழுவினரிடம் கூறினர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







