33.9 C
Chennai
April 25, 2024
உலகம்

சீனாவில் உள்ளாடை தொடர்பான மாடலிங்கில் பெண்களுக்குத் தடை

சீனாவில் பெண்கள் உள்ளாடை தொடர்பான மாடலிங்கில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்த விளம்பரங்களில் ஆண்கள் நடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தரமில்லாத தயாரிப்புகள், கொரோனா, பொருளாதாரம் போன்ற சர்ச்சைகளில் சிக்கி வந்த சீனா இப்போது உள்ளாடை தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. பரந்து விரிந்த சீனா வர்த்தகத்தில் இ-காமர்ஸ் வர்த்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த இ-காமர்ஸின் மொத்த விற்பனையில் 10 ஆன்லைன் ஃபேஷன் நிறுவனங்கள் மூலமே வருகின்றன. தினசரி புதிது புதிதான உடைகளுடன் லைவ் ஸ்ட்ரீம் செய்து மார்க்கெட்டிங் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பெண் மாடலிங் அழகிகள் உள்ளாடை அணிந்து விளம்பரங்களில் நடிப்பதையும், லைவ் ஸ்ட்ரீமிங் செய்து ஆடைகளை விற்பதையும் சீன அரசு தடை விதித்துள்ளது. ஆபாசமான விஷயங்களில் இணையத்தில் பரப்புவதற்கு எதிரான சட்டப்படி, உள்ளாடைக்கு மாடலிங் செய்யும் விளம்பரங்களில் பெண்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

இந்தக் கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் ஃபேஷன் நிறுவனங்கள் பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் ஆண்களை நடிக்க வைத்து ஒளிபரப்பி வருகின்றனர். ஆண் மாடல்கள் Bra உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இந்த படங்களை கலாய்த்து பதிவு போட்டு வருகின்றனர். அதேநேரத்தில் “பெண்கள் அதிகளவு பணியாற்றும் இந்தத் துறையில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது அபத்தமானது.” என கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading