சென்னை அரும்பாக்கத்தில் கூவம் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என பொதுப்பணித்துறைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள் ளது.
சென்னை அரும்பாக்கத்தில் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டு, அதனை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் ஒருபகுதியாக, 93 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட வீடுகளில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், அரும்பாக்கம் பகுதியில் எஞ்சி இருக்கும் மக்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என பொதுப்பணித் துறைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.