ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது மாதாந்திர ஜி.எஸ்.டி வருவாய்

மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், முந்தைய மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.…

மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், முந்தைய மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. வழக்கமாக ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 92 ஆயிரத்து 849 கோடி ரூபாயாக குறைந்தது.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த மாதத்தில், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், மத்திய ஜிஎஸ்டியாக 22 கோடியே 197 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டியாக 28 ஆயிரத்து 541 கோடி ரூபாயும், சர்வதேச ஜிஎஸ்டியாக 57 ஆயிரத்து 864 கோடி ரூபாயும், செஸ் வருவாயாக 7 ஆயிரத்து 790 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.