‘ஓபிஎஸ் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்’ – இபிஎஸ் தரப்பு பதில் மனு

ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாகவும், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத்தலைமைக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் ஓபிஎஸ் மனுவிற்கு, இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்குப் பதில் மனு அளித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சக்கட்டம்…

ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாகவும், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத்தலைமைக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் ஓபிஎஸ் மனுவிற்கு, இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்குப் பதில் மனு அளித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு அதிமுகவில் நடைபெறும் விவகாரம் தொடர்பாக விரிவாகத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. அந்த மனுவில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்குத் தலைமை நிலைய செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்தார்.

அண்மைச் செய்தி: ‘4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்பு’

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் எனவும், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் எனவும், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலைப் பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது எனவும், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுகோள் வைத்ததன் காரணமாக ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்ட முடிவெடுக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.