4 மணி நேரம் – 50 ஆயிரம் முகக்கவசம்; விழிப்புணர்வு நிகழ்ச்சி

4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டுப் பிரசுரம்…

4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மேயர் பிரியா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது 8 குழுவாகப் பிரிந்து முகக்கவசம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளா, ஹரியானா, டெல்லி போன்ற 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 8970 பேருக்கு இன்று காலை நிலவரப்படி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது எனக்கூறினார். மேலும், சென்னையில் 632 பேருக்கு நேற்று மட்டும் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது எனத்தெரிவித்த அவர், தினமும் பாதிப்பு இடங்களில் கள ஆய்வுகள் செய்து, தொடர்புடையவர்களையும் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘’அதிமுகவைக் காத்திட, கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள்’; சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்’

தொடர்ந்து பேசிய அவர், சென்னை மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் தொடர்ந்து 4 மணி நேரம் முகக் கவசம் விநியோகம் செய்ய உள்ளதாகவும், 67,500 முகக் கவசங்களை 150 தன்னார்வலர்கள் மூலம் வழங்க இருப்பதாகத் தெரிவித்த அவர், வரும் 10-ஆம் தேதி 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் எனக் கூறினார். மேலும், 38.62 லட்சம் பேர் முதல் தவணை செலுத்தாமல் உள்ளதாகக் கூறிய அவர், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பதே காட்டுப்பாடு தான் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.