அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டு: உயர்நீதி மன்ற மதுரைகிளை

பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றும் சில குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை அவசியமாகிறது எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை கருத்துத் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாகர்கோவிலைச்…

பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றும் சில குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை அவசியமாகிறது எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பெமிலா என்ற செவிலியர் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது,

பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
சில குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்தோடு வழங்கப்பட்டாலும், சில
குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை அவசியமாகிறது. அரசு துறைகளில் ஏராளமான ஊழல்
முறைகேடுகள் உள்ளன. பல அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களின் கடமையையும் பணியை முறையாக செய்வதில்லை என பொதுமக்கள் தரப்பில் ஏராளமான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆரம்ப சுகாதார மையங்களின் இயக்குனர், இதனை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில்
திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் இருப்பதை
உறுதிப்படுத்த வேண்டும். பணியை செய்ய சுணக்கம் காட்டும் அலுவலர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.