முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலிடத்தில் முக ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது.  இதனை உடன் பிறப்புகள் திருவிழாப்போல் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தேசிய அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் புகழை பரப்பும் வகையில் அவரை மாஸ் ஹிரோவாக டிரென்டிங் செய்து தேசிய அளவில் முதலிடம் வகிக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக சைலன்டாக திமுகவிற்கு எதிரான கருத்துக்களை தாங்கிய போஸ்டர்களை தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பற்றி கூற வேண்டுமென்றால் என்ன கூறுவீர்கள் என மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றார். அதற்கு காரணம் ஸ்டாலினை போல் கடுமையாக உழைப்பவர்களை தற்காலத்தில் காண்பது அரிது என்ற பொருள்படும் கருணாநிதி கூறியதாக அப்போது பேசப்பட்டது. இதனை ஸ்டாலினும் தனக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதாகவே கருதுவது உண்டு. அப்படிபட்டவர் ஆட்சிக்கு வந்த முதல்நாள் முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். உதாரணமாக, கொரோனா பரவல், கடும் மழை வெள்ளம், மின்வெட்டு என கூறிக்கொண்டே செல்லலாம்.

இவற்றையெல்லாம் ஒரு பெரும் பிரச்சனையாக கருதாமல், அதனை மிகவும் திறம்பட கையாளுகிறார் ஸ்டாலின் என பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நிதிச்சுமையை காரணம் காட்டி மக்களின் நலப்பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இதனை திறம்பட கையாளவும், தமிழகத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காகவும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐந்து பொருளாதார வல்லுனர் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவில் உள்ளவர்கள் சம்பளம் எதுவும் பெறாமல், தங்களால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களை அரசுக்கு ஆலோசனைகளாக தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ஓராண்டு சாதனைகளை டுவிட்டரில் வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் விதமாக திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பதை தங்களது பதிவுகளாக உடன்பிறப்புகள் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்காக தேசிய அளவில் #1YearOfCMStalin ஹேஷ்டக்கை டுவிட்டரில் டிரென்டிங் செய்து வருகின்றனர். இவர்களின் கருத்துகள் டுவிட்டரில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உள்ளன. திராவிட மாடல் என்பது  என்னவென்று உலக மக்களும் அனைவரும் அறியும் வகையில் ஆங்கில மொழியிலும் பதிவிட்டு வருகிறோம் என்கின்றனர் உடன் பிறப்புகள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை, இருளில் தவிக்கும் தமிழகம் என்ற வாசகங்களோடு மின்மிகை டு மின்வெட்டு என அஇஅதிமுக தகவல் தொழிற்நுட்ப பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இரு திராவிட கட்சிகள் இன்றைய புதுவகை அரசில் பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக உள்ளது.

இராமானுஜம்.கி

Advertisement:
SHARE

Related posts

தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்

Niruban Chakkaaravarthi

உ.பி வன்முறை: 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது?

Halley Karthik

பல முனை போட்டி அதிமுகவுக்கு சாதகம்தான் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan