ஜெயலலிதா ஆட்சியில் எந்தகுறையும் இருந்தது கிடையாது. அதேபோன்ற ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல், 26-ஆம் தேதி, 3-ஆம் கட்ட ஆன்மீகப் பயணத்தை துவங்கிய சசிகலா, திருச்சியில் இருந்து கார் மூலம், நாகை மாவட்டம் திருக்கடையூர் சென்ற சசிகலா, அமிர்தகடேசுவரர் அபிராமியம்மன் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார். அடுத்ததாக, சிங்காரவேலன் கோயிலில் சசிகலா ஸ்வாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தனது ஆன்மிகப் பயணத்தை நிறைவுச் செய்தார். இந்நிலையில், தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற அவர், அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தீபாராதணையில் கலந்துகொண்டு 5-அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு வெறுப்பை கொடுத்திருக்கிறது என விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் திமுகவின் கரை வேட்டிகள் தான் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் காவல் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்து நடைபெறுவதாக சாடினார். மேலும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், விரைவில் தான் அரசியல் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘திருச்செந்தூர் கோவிலுக்கு காணிக்கை வழங்கிய சசிகலா ’
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஓராண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை என தெரிவித்த அவர், தமிழகத்தில் அரசு அதிகாரிகள் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், மக்கள் பணிக்காக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு செல்கிறதா? இல்லையா? என கேள்வி எழுப்பினார். அப்போது, மக்கள் பணிகளில் தவறுகள் நடக்கா வண்ணம் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சசிகலா கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா ஆட்சியில் எந்தகுறையும் இருந்தது கிடையாது. அதேபோன்ற ஆட்சியை கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.