புதுச்சேரி மாநில முதலமைச்சராக, என்.ரங்கசாமி நான்காவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனாநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ரங்கசாமி, முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடவுளின் பெயரால் பதவியேற்றுக்கொண்ட அவர் நான்காவது முறையாக முதலமைச்சர் ஆகி இருக்கிறார்.
அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், என்.ஆர். காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக தலைவர் எல். முருகன், புதுச்சேரி தலைவர் சாமிநாதன், தேசிய பொதுச் செயலாளர் சிடி-ரவி, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் பங்கேற்றனர்.