சென்னையில் உங்கள் தெருவில் குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தை இனி இணையத்தில் அறியலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணா நகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் தெருக்களில் குப்பை சேகரிக்க வரும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் ஆகிய விபரங்களை, https://chennaicorporation.gov.in/gcc/bov_route/ என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 மண்டலங்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் இந்த பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் நிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மண்டலம், வார்டு, வாகனத்தின் அடையாள எண், அதன் பயண எண், நேரம் மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் தெருக்களின் பெயர்கள் அடங்கிய விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் மற்ற மண்டலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– பிரியா, மாணவ ஊடகவியலாளர்







