அனுபவத்தை பாடல்களாக தந்தவர் கவிஞர் மருதகாசி

திரையிசை பாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஒடிச்சொல் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. இசையின் சந்தத்திற்கு ஏற்றபடி வரிகளை இணைக்க எழுதப்படும் அந்த வார்த்தையை கவிஞர் மருதகாசி கையாண்ட விதம் குறித்து பார்க்கலாம்.. திரைப்பாடல்களில் ஒரு வரியுடன் அடுத்த…

திரையிசை பாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஒடிச்சொல் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. இசையின் சந்தத்திற்கு ஏற்றபடி வரிகளை இணைக்க எழுதப்படும் அந்த வார்த்தையை கவிஞர் மருதகாசி கையாண்ட விதம் குறித்து பார்க்கலாம்..

திரைப்பாடல்களில் ஒரு வரியுடன் அடுத்த வரியை இணைக்கப் பயன்படும் ஒடிச்சொல் என்ற பதத்தை அருமையாக கையாண்டிருப்பார் கவிஞர் மருதகாசி. `திங்கள் உறங்கிய போதும் தென்றல் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா’ என்ற பாடலில் ஒடிச்சொல் பதத்தை கையாண்டிருப்பார் மருதகாசி. பாடலை எழுதியபோது, அவருடைய இளையமகன் மருதபரணி, திங்களும் தென்றலும் உறங்கும்போது கண்கள் உறங்காமலா இருக்கின்றன என கேட்டதால், `காதல்’ என்னும் ஒடிச்சொல்லை, ஓசையில் பொருத்தி, `கண்கள் உறங்கிடுமா, காதல் கண்கள் உறங்கிடுமா’ என எழுதினார் மருதகாசி..

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திற்காக மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா ஆசைத்தம்பி, இது மாறுவதெப்போ தீருவதெப்போ ஏழைத்தம்பி என்ற பாடல் எழுதப்பட்டது. ஆனால் அப்போதைய அரசியல் சூழலில், தணிக்கைத்துறை ஏற்றுக்கொள்ளாது எனக்கருதியதால், மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்றும், மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை எனவும் மாற்றப்பட்டது.. எம்ஜிஆரின் ஹிட் பாடல்களில் ஒன்றாக ஆனது.

“நீலவண்ணக் கண்ணா வாடா” பாடல் தாலாட்டினால், சமரசம் உலாவும் இடமே பாடல் வாழ்க்கை தத்துவத்தை கூறியது. “நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே” என்ற பாடல் மனதை உருக வைத்தது. இத்தனை பாடல்களையும் தந்தவர் கவிஞர் மருதகாசி. நேற்றைய பாடல்களைப் போல் இன்றைய பாடல்கள் இல்லை என்பது பலரது கருத்தாக உள்ள நிலையில், அனுபவத்தில் எழுதப்பட்ட பாடல்களே நிலைத்து நிற்கின்றன. விவசாயியாக இருந்து, தான் பெற்ற அனுபவத்தை பாடல்களாக தந்தவர் மருதகாசி.

பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை என பலரும் கூறுவதற்கு காரணம் சொல்லத்தான் வேண்டுமா?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.