காசி விஸ்வநாதர் கோயிலில் இனி இதுதான் பிரசாதம்…

உத்தரப்பிரதேசம் காசி விஸ்வநாதா் கோயிலில் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு…

உத்தரப்பிரதேசம் காசி விஸ்வநாதா் கோயிலில் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டு சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட ‘ஸ்ரீ அன்ன பிரசாதம்’ வழங்கப்பட இருக்கிறது. அனைத்து உணவு தானியங்களைக் காட்டிலும் சிறுதானியங்கள் சிறந்தது என்பதால், அவற்றை ‘ஸ்ரீ அன்ன’ என பிரதமா் மோடி அண்மையில் குறிப்பிட்டாா்.

இதையும் படிக்க:  சரிவுப் பாதையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி -ரகுராம் ராஜன்

இதுதொடர்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், உத்தரப்பிரதேச அரசின் அறிவுறுத்தல்படி, ஸ்ரீ அன்ன பிரசாதம் எனும் லட்டு பிரசாதமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துடன் இணைந்த சுய உதவிக் குழுக்கள் தற்போது இந்தப் பிரசாதங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சிறுதானியத்தைப் பயன்படுத்தி ஸ்ரீ அன்ன பிரசாதத்தைத் தயாரிக்கும் பணியில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரசாத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது. பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.