சரிவுப் பாதையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி -ரகுராம் ராஜன்

இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்வதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள ரகுராம் ராஜன், “தனியார் முதலீடு குறைவு, வட்டி விகிதிங்கள்…

இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்வதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள ரகுராம் ராஜன், “தனியார் முதலீடு குறைவு, வட்டி விகிதிங்கள் உயர்வு, சர்வதேச பொருளதார சுணக்கம் உள்ளிட்டவை காரணமாக 1950-80 காலட்டத்தில் இருந்த மிகவும் குறைவான (4%) பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும் அபாயம் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளதாரம் புள்ளி விவரங்கள் சரிவை மட்டுமே காட்டுகின்றன. நடப்பாண்டு இறுதியில் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் மீள்வது மிகவும் கடினம்.

இதையும் படிக்க: ”கண்ணை நம்பாதே”- திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு 

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கப் போகிறது என்பது தான் மிகப்பெரிய கேள்வி. தற்போதைய நிலையில் இருந்து மாறி 5% என்ற நிலையை எட்டினாலே அதிர்ஷ்டவசமான நிகழ்வாக இருக்கும். உள்கட்டமைப்புத் துறை முதலீடுகளில் கவனம் செலுத்தும் அரசு, உற்பத்தித் துறையையும் கவனத்தில் எடுக்க வேண்டும். சேவைகள் துறையில் அரசின் முயற்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. முதலீட்டுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் உருவாவது குறைவாகவே உள்ளது.” என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.