குழந்தைகளின் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் Babyark நிறுவனம் அவர்களுக்காக பிரத்யேகமாக சீட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பரபரப்பான நவீன காலத்தில் தினம் தினம் புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியான கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் கார். நம்முடைய பயணத்தை மேலும் சிறப்பாக மாற்றும் வகையில் பல்வேறு ரகங்களில் சொகுசு கார்கள் தினமும் சந்தைகளில் அறிமுகமாகி கொண்டிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் : Lakme Ramp Walk; கம்பீரமாக நடந்து வந்த சுஷ்மிதா சென்!
அந்த வகையில் காரில் பயணம் செய்யும் போது குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் தற்போது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக சீட் ஒன்றை தயாரித்துள்ளனர். Babyark என்னும் நிறுவனம் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது உலகிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான சீட்டாக கருதப்படுகிறது.
இந்த சீட்டானது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதால் கார்பன் பைபர் கொண்டு சீட் தயாரிக்கப்பட்டள்ளது. மேலும், உயர்ரக பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டை முறையாக காரில் பொருத்தினால் குழந்தைகள் அமர வசதியாக இருக்கும். இந்த சீட் 49 இன்ஜ் உயரமும், இதன் எடை 1.8 கிலோ. இந்த சீட்டை முன்பக்கமாகவும், பின் பக்கமாகவும் அட்ஜெட் செய்து வைத்து கொள்ளலாம்.
இதன் தரம் குறித்து 200 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சீட்டிற்கு 10 வருட மெயின்டனஸ் மற்றும் சர்வீஸ் இலவசமாக Babyark நிறுவனம் செய்து கொடுக்கிறது. இந்த சீட்டை பெற வேண்டுமானால் முன்பதிவு செய்து பெற்று கொள்ளவேண்டும். இதன் விலை ரூ.81,000 முதல் ரூ.97,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.