“இனி தமிழில் பேசப் போகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடியின் உரையை இனி தமிழில் கேட்கபதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி,  அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்ற…

பிரதமர் மோடியின் உரையை இனி தமிழில் கேட்கபதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி,  அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

வ.உ.சி. துறைமுகம், மீனவர்களுக்கு தற்போது பயனுள்ளதாக அமைந்துள்ளது.  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

நான் அடிக்கடி தமிழ்நாடு வருகிறேன். ஆனால் என்னால் தமிழ் மொழியைத் தெளிவாகப் பேசமுடியவில்லை.  நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இனி தமிழில் பேசப்போகிறேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,  இனி நமோ செயலி மூலம் தமிழ் மொழியில் பிரதமரின் உரையைக் கேட்கலாம்.  மேலும்,  மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரின் உரையையும் தமிழில் கேட்கலாம் என அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.