தந்தையின் வழியில் மகன் என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் மகனின் வழியில் தந்தை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு வீரப்பன்
சத்திரம் காவிரி சாலை பகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்து முதல் நாளில்
இ வி கே எஸ் இளங்கோவன் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வாகன பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய இ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்ததாவது..
“இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். தந்தையின் வழியில் மகன் என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் மகனின் வழியில் தந்தை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. மகன் இறந்த துக்கத்திலிருந்து இன்னும் 27 நாட்கள் கூட ஆகவில்லை தாய்மார்கள் வந்திருப்பதை
பார்த்து பக்கத்தில் இருந்து நான் மீண்டு விட்டேன் என்றும்.
செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன் என்று பெருமையாக சொல்லலாம். நான் சொல்வதை செய்யக்கூடியவர்களாக முதலமைச்சர்களும், அமைச்சர்களும் இருக்கிறார்கள். நான் எனது மனைவி இளைய மகன் சஞ்சய் என மூன்று பேர் இருக்கின்றோம் எனக்குத் தேவை என்று எதுவும் கிடையாது என் முன்னோர்கள் சம்பாதித்து வைத்ததை நான் 90 சதவீதம் விற்று விட்டாலும் கூட இன்னும் மீதம் பத்து சதவீதம் இருக்கிறது. அது எனக்கும் என் மனைவிக்கும் என் மகனுக்கும் வாழ்நாள் முழுவதும் போதும்.
முதலமைச்சரிடமும், அமைச்சர்களிடமும் எனக்குள்ள உரிமையை வைத்து ஈரோட்டு மக்களுக்கு பல நல்ல காரியங்களை நான் செய்வேன். என்றைக்கு உங்களது முகத்தில் நான் சிரிப்பை பார்க்கின்றேனோ அன்றுதான் என் மகன் நினைத்ததை நான் செய்திருக்கிறேன். அண்ணாமலை, அண்ணாமலை என்று சொல்கிறார்கள் பொய் சொல்வதை தவிர வேறு ஒன்றும் செய்யாத ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் அண்ணாமலை தான்.
ஈரோட்டைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு நேரம் ஆகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை நான் செய்வேன்” என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
– யாழன்