பேருந்தை இயக்குவதில் மட்டுமல்ல… இசையிலும் நாங்கள் சிறப்பானவர்களே – அசத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்…!

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு இதமான இசை இசைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் அசத்தினர். கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற பயனாளிகளுக்கு பண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் எதிரில்…

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு இதமான இசை இசைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் அசத்தினர்.

கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற பயனாளிகளுக்கு பண
உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அலுவலகத்தில்
நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றனர்.

இவர்கள் குளிர்சாதன ஓய்வறை, ஜி.பி.எஸ் அறிவிப்பான் பொருத்தபட்ட பேருந்துகளை துவக்கி வைத்தனர். இவர்களுக்காக முன்பே போக்குவரத்து கழக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதை அடுத்து அமைச்சர் வரும் வரை மக்கள் வெயிலை மறந்து சிறிது நேரம் இளைப்பாறும் விதமாக, வெயிலுக்கு தகுந்தார் போல இசையால் மகிழும் வண்ணம் சேரன் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இளையராஜாவின் இசையில் வெளி வந்த பாடல்கள், இசை கருவிகளில் வாசிக்கப்பட்டது.

வாசிக்கப்பட்ட இசை வெயிலையும் தாண்டி எல்லோர் மனதையும்  குளிர்வித்து
மகிழ்ச்சி அளித்தது. பேருந்தை இயக்குவதில் மட்டுமல்ல; இசையிலும் நாங்கள் சிறப்பானவர்களே என்பது போல போக்குவரத்து தொழிலளர்களின் இசை வாசிப்பு இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.