சங்கரன்கோவில் அருகே காற்றின் வேகத்தால் 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காற்றின் வேகத்தால் 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை, உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தற்போது…

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காற்றின் வேகத்தால் 50
அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை, உயிருடன் மீட்ட தீயணைப்புத்
துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தற்போது பலத்த காற்று வீசு
வருகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி
பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்ற 13 வயது சிறுவன், விளையாடிவிட்டு தண்ணீர்
குடிப்பதற்காக ஒரு மோட்டார் பம்பு செட்டிற்கு சென்றுள்ளார். மேலும், தண்ணீர்
குடித்துவிட்டு கிணறு அருகே நின்று கொண்டிருந்த போது, திடீரென பயங்கர
காற்று வீசி உள்ளது.

இதை சற்றும் எதிர்பாராத அர்ஜூன் காற்றின் வேகம் தாங்க முடியாமல், 50 அடி
ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட
அர்ஜூன், மோட்டார் பம்பு செட்டின் குழாயை பிடித்துக் கொண்டு நீண்ட நேரமாக
தண்ணீரில் இருந்த படி கூச்சலிட்டு உள்ளார். அப்பொழுது, சிறுவனின் கூச்சல்
சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடி வந்து கயிறு மூலம் சிறுவனை மீட்க முயற்சி
செய்துள்ளனர்.

சிறுவனை மீட்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், விரைந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சிறுவனை எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் உயிருடன் மீட்டனர். இந்த செயலைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.