கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது போலீசாரை தாக்கி, வாகனதிற்கு தீ வைத்த வட மாநில தொழிலாளர்கள் கைது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நான்காயிரத்திருக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதில் சில வட மாநில தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, மது அருந்திவிட்டு கூச்சலிட்ட படி இருந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் அவர்களை கண்டித்தனர். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கைக்கலப்பாக மாறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, தகவல் அறிந்து இந்த வன்முறையைத் தடுக்க காவல் ஆய்வாளர் உள்பட 5 போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அனைவரையும் கலைந்து செல்லும்படி போலீசார் கண்டித்ததால், அந்த வட மாநிலத்தவர்கள் போலீசாரையும் தாக்கத் தொடங்கினர். பின், வன்முறை முற்றி போலீசாரின் வாகனங்களை எரித்தனர். இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான போலீசாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், 150க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், 26 பேரை கைது செய்து உள்ளனர்.