தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளம்பிய
நிலையில், பூவிருந்தவல்லி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தங்களது உரிமையாளரை சகோதரன்போல் பாவித்து சீர்வரிசையுடன் வந்து விழாவை சிறப்பித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி பத்மாவதி. இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா
பூந்தமல்லி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன
உரிமையாளரான இவர் தன்னிடம் பணியாற்றும் வடமாநில தொழிலாளரை உறவினர் போல் எண்ணி அழைப்பு விடுத்து இருந்தார்.அ ழைப்பை ஏற்று 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சகோதரத்துவ எண்ணத்துடன் கையில் சீர்வரிசையுடன் வந்து
அசத்தினர். இது விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: 22 ஆண்டுகால திரைப்பயணத்தில் முதல் முறையாக ஆண் நடிகருக்கு சமமான ஊதியம் பெற்றேன் -பிரியங்கா சோப்ரா
இதைத்தொடர்ந்து, உறவினர்கள்போல் பெண்ணிற்கு நலங்கு வைத்து மலர்
தூவி ஆசீர்வாதம் செய்தனர். அதேபோல, விழாவிற்கு வந்திருந்த வட மாநில தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவத்துடன் உணவு வழங்கி அன்பை பரிமாறினர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களை உறவினர்போல் பாவித்து அவர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.
-ம.பவித்ரா