பிரியங்கா சோப்ரா, தனது புதிய ரூசோ பிரதர்ஸ் அதிரடி நாடகமான சிட்டாடல் தொடருக்காக தனது 22 ஆண்டுகால திரைப்பயணத்தில் முதல் முறையாக ஆண் நடிகருக்கு சமமான ஊதியம் பெற்றதாக கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன், லெஸ்லி மான்வில் மற்றும் ஸ்டான்லி டுசி ஆகியோர் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரான சிட்டாடலின் டிரெய்லர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அமேசான் ஸ்டுடியோஸ் தலைவர் ஜெனிஃபர் சால்கே உடனான உரையாடலின் போது, அவர் இதை கூறினார், “இதைச் சொல்வதில் நான் சிக்கலில் சிக்கக்கூடும், நான் இப்போது 22 வருடங்களாக திரையுலகில் உள்ளேன். கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 2 டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளேன். ஆனால் நான் சிட்டாடல் செய்த போது, எனது கேரியரில் முதல்முறையாகச் சம்பளம் சமமாக இருந்தது.
மேலும், “ஆண் நடிகர்களுக்கு இணையாக அதே அளவு வேலை மற்றும் முயற்சி செய்தேன், ஆனால் எனக்கு மிகக் குறைவான ஊதியம் கிடைத்தது. ஆனால் அமேசான் ஸ்டூடியோஸ் சமமான ஊதியத்தை இதில் எனக்கு வழங்கியது. ‘நீங்கள் சொல்வது சரிதான், இது நியாயமானது.’ நான் ஆச்சரியப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.







