பொதுவா பயணம் செய்ய யாருக்கு தான் பிடிக்காது. அதுலயும் பல நாடுகள் சுற்றி வந்தா? இன்னும் சிறப்பு தான்….
அப்படி ஒரு நபர் தான் புவனிதரன். இவர் தன்னுடைய அயல் நாட்டு பயணங்களை Tamil Trekker-ன்ற யூடியூப் பக்கத்துல பதிவு செஞ்சிட்டு வராரு. அதுமட்டுமின்றி இவருடைய இந்த youtube பக்கத்திற்கு தனக்கென மிகப் பெரிய Follwers-ஐ வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் தான் இந்த வார “டிஜிட்டல் டான்” பகுதிக்காக நமது செய்தியாளர் சுஷ்மா பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் பகிர்ந்துகிட்ட விஷயங்கள் ரொம்பவே சுவாரஸ்சியமா இருந்தது.
எடுத்துக்காட்டாக 9-ம் வகுப்பில் Fail ஆன மாணவன் நான். அயல்நாட்டில் ஒரு பயணத்தின் போது என்னை காவல்துறையினர் கைது செய்தனர். சோமாலியாவில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னை மரண பயத்துக்கு கொண்டு சென்றது போன்ற தகவல்களை இந்த Interview – வில் அவர் பகிர்ந்துள்ளார். இன்னும் என்னென்ன தகவல்களை டிஜிட்டல் டான் பகுதி மூலம் நமக்கு தெரிவித்துள்ளார் என்பதை ஞாயிறு (12.03.23) மதியம் 1:30 மணிக்கு நியூஸ் 7 தமிழில் காணலாம்…..