முக்கியச் செய்திகள்குற்றம்தமிழகம்செய்திகள்

ரூ.1,500க்கு வாங்கி ரூ.2.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற வடமாநில கும்பல் | வெளியான அதிர்ச்சி தகவல்!

பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற வடமாநில கும்பல் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சூலூர் அருகே உள்ள ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயன்.  இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.  இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை.  இந்நிலையில் சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஹார்லிக்ஸ் தயாரிக்கும் கம்பெனியின் முன்புறமாக ஹோட்டல் கடை நடத்தி வரும் பீகாரைச் சேர்ந்த அஞ்சலி,  மகேஷ் குமார் தம்பதியினரிடம் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.  விவசாய வேலை செய்து வரும் விஜயன் தனக்கு குழந்தைகள் இல்லாததை பலரிடமும் சொல்லி கவலைப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவரிடம் பழகிய அஞ்சலி,  மகேஷ் குமார் தம்பதி தங்கள் வசம் பிறந்து 15 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும்,  அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் உங்களுடைய பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறி உள்ளனர்.  இதற்கு விஜயன் சம்மதம் தெரிவிக்க, அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவலை சொல்லி உள்ளார்.  பீகாரில் இருந்த அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேக குமாரி ஆகியோர் கடந்த 20 தினங்களுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை சூலூர் கொண்டு வந்து அஞ்சலி,  மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து உள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே பேசியபடி விவசாயி விஜயன் குடும்பத்தாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் விலைக்கு விற்று ள்ளார்.  இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் வாங்கி உள்ள நிலையில் இன்னும் 70 ஆயிரம் ரூபாய் வர வேண்டி உள்ளது.  இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சூலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை செய்து குழந்தை கடத்தி வந்து விற்பனை செய்ததை உறுதி செய்து உள்ளனர்.  குழந்தை விற்பனையை உறுதி செய்தவர்கள் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  உடனடியாக கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை செய்து வந்தனர்.  உடனடியாக குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்தவுடன் ஹோட்டல் கடை நடத்தி வந்த பீகார் தம்பதியினர் அஞ்சலி, மகேஷ் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஒரு குழந்தை பெண் குழந்தை மட்டுமின்றி மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு 5 லட்சம் ரூபாய் விலை பேசி விட்டது தெரியவந்தது.  உடனடியாக இரண்டு குழந்தைகளையும் மீட்ட போலீசார் அஞ்சலி,  மகேஷ் குமார் தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு நிலவியில் உள்ளன.  சிறைக்கு அனுப்பிய தம்பதி தொடர்பாக தொடர் விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை வாங்கியதாக ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாய விஜயனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் 2 1/2 லட்சம் ரூபாய் பேசி குழந்தையை வாங்கியது ஒப்புக் கொண்டார்.  அவரையும் கைது செய்து பின் அஞ்சலி, மகேஷ் குமாரின் ஹோட்டலில் அதிரடி சோதனை செய்தனர்.  அப்போது கிடைத்த தகவலின் பெயரில் அஞ்சலியின் தாயார் பீகாரில் இருந்து குழந்தையை கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர்.

உடனடியாக அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகா குமாரி ஆகியோரை கோவை வர வழைத்தனர் காவல்துறையினர்.  கோவை வந்த பூனம் தேவி மேகாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர் . அதில் பீகார் பகுதியில் உள்ள ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது.  இதை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் 1,500 ரூபாய் கொடுத்து பிள்ளையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி எடுத்து வந்து கோவையில் விற்பனை செய்ததை பூனம் தேவி அவரது இளைய மகள் மேகா குமாரி ஒப்புக் கொண்டனர்.  அதைத் தொடர்ந்து அவர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளை திசைத்திருப்பவே செங்கோல் விவகாரம் – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

Web Editor

யார் இந்த கேப்டன் மில்லர்?

Web Editor

இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading