முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

திடீர் உடல் நலக்குறைவு: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தி சினிமாவின் மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷா. கமல்ஹாசனின் ஹேராம், மீரா நாயரின் மன்சூன் வெட்டிங், கிரிஸ், என வெட்ன்ஸ்டே உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், குஜராத்தி உட்பட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச் சல் மற்றும் நுரையீரல் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது.

’கடந்த 29 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர்’ என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகினர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு

Halley karthi

ரூ.1.15 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

Vandhana

இந்தியாவுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்த ஹாலிவுட் நடிகர்!

Jeba Arul Robinson