முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 12ஆம் தேதி தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிறைவு பெற்றது. இதுவரை 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். நேற்றிய நிலவரப்படி ஆண்கள் 3,332 பேரும் பெண்கள் 664 பேரும் மற்றும் ஒரு திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை தொடங்குகிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை: எடப்பாடி புகாருக்கு மறுப்பு

Halley Karthik

சமையல் எண்ணெய் வரி குறைப்பு!

EZHILARASAN D

தமிழ் சினிமாவை ஆண்ட கர்நாடக இசை

G SaravanaKumar