2022ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோ ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானியானியான ஸ்வாண்டே பாபோ 2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை “அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய” கண்டுபிடிப்புகளுக்காகப் பெற்றுகிறார். கடந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கர்களான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த பரிசு ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூடில் நோபல் சபையால் வழங்கப்படுகிறது. 10 மில்லியன் மதிப்புள்ள இந்த விருது உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது.
இந்த நோபல் பரிசானது ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்கார தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான சாதனைகளுக்கான பரிசுகள் 1901 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவிட் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்டாக்ஹோமில் நோபல் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.







