முக்கியச் செய்திகள் இந்தியா

தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களது மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என உத்திர பிரதேச பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. எனினும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக பொது மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், அரசு அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்வதற்காக உத்திர பிரதேச பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களின் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!

Saravana Kumar

மெட்ரோ ரயில் நிலையப் பணியில் திருநங்கை: பொதுமக்கள் வரவேற்பு!

Niruban Chakkaaravarthi

3 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!