பேரிடர் காலங்களில் குடியிருக்கும் வீட்டின் வளாகம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதனை மீண்டும் சரி செய்து தரும் வரை வீட்டு உரிமையாளர் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற வகையில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்தநாளான 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 21, 22, 23 அகிய தேதிகளில் கேள்வி நேரம் நடைப்பெற்றது. தொடர்ந்து 6வது நாளாக நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தில், காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டம் கூடி நேரமில்லா நேரம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்ததில், பேரிடர் காலங்களில் வாடகை தாரர்கள் குடியிருக்கும் வீடு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதனை மீண்டும் சரி செய்து தரும் வரை வீட்டு உரிமையாளர் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற வகையில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் திருத்தச்சட்டத்தை பேரவையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் முத்துசாமி.
சட்ட முன் வடிவில், வாடகைக்கு விடப்பட்ட வளாகமானது, பேரிடர் நிகழ்வு ஒன்றின் காரணமாக, வாடகைதாரருக்கு வாழத்தகுதியற்றதாகும்போது அல்லது வாடகைதாரரால் வசிக்க இயலவில்லையென்றால், வாழத்தகுதியுடையதாக உரிமையாளர்கள் மீண்டும் உருவாக்கி தரும் வரை வாடகைக்கு இருப்பவர்களிடம் இருந்து வாடகை வசூலிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.







