அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் அரவக்குறிச்சி அருகே மணமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேணுகோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்டுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த தெரிந்துகொள்வதாக குறிப்பிட்டுயிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை எனவும் அப்படி மரங்களை வெட்ட வேண்டுமென்றால், தொடர்புடைய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுபணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டிய நபர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அதில் தொடர்புடையவர்களை போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, குடகனாறு செயற் பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.







