முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது- ஆளுநர் தமிழிசை

தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆத்மா அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மேமோகிராபி எனும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் இயந்தித்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, நான் இறைவனை வேண்டி கொண்டு தான் மருத்துவ கருவிகளை ஆரம்பித்து வைப்பேன். இந்த டிஜிட்டல் மெமோகிராபி நிறைய பேருக்கு பரிசோதனைக்கு பயன்பட வேண்டும். அதில் யாருக்கும் மார்பக புற்றுநோய் இருக்கும் என்ற ரிசல்ட் மட்டும் வரக்கூடாது என்றார்.

பணம் இல்லை என்பதற்காக யாரும் சிகிச்சை இல்லாமல் உதாசீனப்படுத்தப் படக் கூடாது. உயிரை காப்பாற்ற நான் என்ன வேலை வேண்டும் என்றாலும் செய்வேன்.
நோய் இருப்பது தெரிந்த பின்பும், மிக முதிர்ந்த நிலைக்கு மார்பக புற்று வந்த பின் உயிரிந்தவர்கள் இங்கு அதிகம். பெண்களுக்கு என்னுடைய முதல் வேண்டுகோள் புற்றுநோய் பற்றி ஒரு சின்ன அறிகுறி இருந்தால் கூட உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

தெலுங்கானாவில் உள்ள ராஜ்பவன் பிங்க் கலராக மாறியதற்கு காரணம், பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணருக்கு மட்டுமே. தெலுங்கானா ராஜ்பவனில் மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட்ட 300 பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ராஜ்பவன் முழுவதும் பிங்க் நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக தெலுங்கானா ராஜ்பவன் மட்டுமே என்று கூறினார்.

அப்போது பிங்க் நிறத்தில் மாறியதால் விவாதம் ஏற்பட்டது. ஏனென்றால் அங்குள்ள TRS கட்சியின் நிறம் பிங்க் என்பதால் மாறிவிட்டேன் என தெரிவித்தனர். பெண்களுக்காக மட்டுமே கலர் மாற்றப்பட்டுள்ளது. வேறு எதற்காகவும் மாற மாட்டேன் என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, ஒரு நிகழ்ச்சியை கலந்து கொண்டாலும் அது பயனுள்ள நிகழ்ச்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் கலந்து கொண்டால் கண்டிப்பாக ஒரு பயனுள்ள நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வேன். எந்த இடத்தில் சிகிச்சை மறுக்கப்பட்டாலும் அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்க கூடிய சூழ்நிலை இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

ஆளுநரின் தலையெழுத்தை இந்த கையெழுத்து மாற்ற முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. கருத்து சொன்னார் என்பதற்காக ஆளுநர் திரும்ப பெற வேண்டுமா? ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு ஒரு ஆளுநரை திரும்ப பெற்றுக் கொண்டீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும் எரிமலையாக இருப்பதை விட இயற்கையாக மகிழ்ச்சியாக நல்ல அருவிகளோடு மழையாக, மலர் கொத்துக்கள் கொடுக்கக்கூடிய மலையாக இருந்துட்டு போங்கள். தமிழகம் நான் பிறந்த ஊர். நான் பிறந்த மாநிலம். தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram