முக்கியச் செய்திகள் இந்தியா

இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், அரியானா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் அந்தேரி கிழக்கு, பீகாரின் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகள், அரியானாவில் உள்ள ஆதம்பூர் தொகுதி, ஒடிசா மாநிலத்தின் தாம்நகர், உத்தரபிரதேசத்தின் கோலகோகர்நாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முனோகோடே ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உத்தரபிரதேசத்தில் கோலா கோகரநாத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அமன்கிரிக்கு 1,24,810 வாக்குகள் கிடைத்தன. சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய், கடந்த ஆகஸ்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால் நடந்த இடைத்தேர்தலில் களமிறங்கிய குல்தீப் பிஷ்னோயின் மகன் பவ்யா பிஷ்னோய் 67,492 வாக்குகள் பெற்று சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பீகாரில் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுபாஷ்சிங் மறைவால் இடைதேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட அவரது மனைவி குசும்தேவி 70,032 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி 79,744 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சோனம் தேவி 63,003 வாக்குகள் பெற்றுள்ளார். ஒடிசாவில் தாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் சூர்யவம்சி சுராஜ் போட்டியிட்டார். இவர், 80,351 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

தெலுங்கானாவில் டிஆர்எஸ்ஸூம், பாஜகவும் தீவிரமாக இந்த தேர்தலில் மோதியது. இதில் ஆளும் டிஆர்எஸ் வேட்பாளர் கே.பிராபாகர் ரெட்டி 96,598 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் 86,485 வாக்குகள் பெற்றார். இதே போல் மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சிவசேனா அணியின் ருதுஜா லட்கே வெற்றி பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

Jeba Arul Robinson

நாளை முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் வரவு வைக்க‍லாம்: ஆர்பிஐ அதிரடி உத்த‍ரவு

EZHILARASAN D

கார்கேயின் வெற்றி காங்கிரசின் வெற்றி: சசிதரூர்

G SaravanaKumar