நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நிபா பாதிப்பால் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 17 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி, மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிபா வைரஸ் காரணமாக கேரளாவிலிருந்து வரக்கூடியவர்களை கண்காணித்து வருவதாகக் கூறினார். நிபா வைரஸ் குறித்து பதற்ற மடைய தேவை இல்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.