தமிழ்நாடு மீனவர் பிரச்னை தொடர்பாக, மாநிலங்களவையில் அழுத்தமாகக் குரல் கொடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல் லா தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல் லா தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதல மைச்சர் கருணாநிதி சிலைக்கு, எம்.எம். அப்துல்லா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் உழைத்தவர்களுக்கு பலன் கிடைக் கும் என்பதற்கு தானே உதாரணம் எனக் கூறினார். கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் எம்.எம்.அப்துல்லா தெரிவித்தார்.








